Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமை மிக்க பள்ளிவாசல் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதநல்லிணக்கத்தை வெளிக்காட்டிய கோயில் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2011
11:08

மேலூர்: மேலூர் அருகே சாம்பிராணிப்பட்டியில் சேங்கை வெள்ளிமலையாண்டி கோயிலில் நடந்த விழாவில் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். மேலூர் அருகில் உள்ள சாம்பிராணிபட்டியில் 500 ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டிலிருந்து வந்தவர்கள் குடியேறினர். அவர்கள் தான் சாம்பிராணிபட்டி என பெயர் சூட்டியதாக முன்னோர் கூறுகின்றனர். இந்த வம்சா வழியில் வந்தவர்கள், தங்களுக்கு உதவியாக இந்துக்களில் மூப்பனார் மற்றும் யாதவ சமுதாயத்தினரை இணைத்துக் கொண்டனர். ஊரில் மூப்பனார் இனத்திற்கு நாட்டாமை வகையறா என கருதி முதல் மரியாதை, யாதவர்களுக்கு கீதாரி வகையறா என கருதி இரண்டாவது மரியாதை, முஸ்லிம்களுக்கு முதலாளி வகையறா எனக்கருதி மூன்றாம் மரியாதையும் செலுத்தப்படுகிறது. மந்தை சேங்கை வெள்ளி மலையாண்டி கோயிலின் ஆடித் திருவிழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மூன்று சமுதாயத்தினருக்கும் பூஜாரிகள் மரியாதை செய்தனர். முஸ்லிம்கள் இந்துக்களுடன் இணைந்து ஊர்வலமாக புறப்பட்டு ஊருக்கு வெளியில் உள்ள பொட்டல் நொண்டிக் கோயிலில் பழம் போடுதல் விழாவை நடத்தினர். அன்வர் பேக் தலைமையில் அனைத்து முஸ்லிம்களும் இதில் கலந்து கொண்டனர். சாமி கும்பிட்ட பிறகு அ.வல்லாள பட்டியை சுற்றிய அனைத்து கிராமங்களுக்கும் கோயில் சார்பில் பாக்கு, பழம் கொடுக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி விரத தினமாகும். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
மதுரை:குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கேதார்நாத் தலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar