பதிவு செய்த நாள்
11
ஆக
2011
10:08
ரம்ஜான் நோன்பிருக்கும் இந்த இனிய வேளையில், பள்ளிவாசலுக்கு செல்வதால் ஏற்படும் மகிமை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பள்ளிவாசலில் அமர்ந்து விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் அல்லாஹ் சுவர்க்கத்திலே பல அந்தஸ்துகளை தருகிறான். ஒருவன் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. அத்துடன் பத்து தீமைகள் அழிக்கப்படுகின்றன. பள்ளிவாசலுக்குள் அமர்ந்து தேவையற்றதைப் பேசுவது, வானவர்களின் பிழை பொறுக்குவதைத் தூரமாக்கிவிடும். அவர்களின் நன்மை நிறைந்த துஆவிற்கு பதிலாக, உலகப்பேச்சின் கெட்ட வாடையால், வேதனை வந்து சேரும். இப்படிப்பட்டவர்களுக்கு வானவர்களின் சாபம் கிடைக்கும்.
"ஒவ்வொரு வெள்ளியும் ஜூம்ஆ தொழுகைக்காக உங்களில் எவரும் தம் வீட்டில் சாவகாசமாக உட்கார்ந்து விட்டு, இமாம் மிம்பரின் மீது ஏறி நின்று, குத்பா நிகழ்த்தும்போது, மக்களின் பிடரியைத் தாண்டித் தொழச் செல்வதை விட, அவன் பின்னிருந்தே சுடுகின்ற தரையில் தொழுவது மேலானதாகும், என்கிறது முஅத்தா என்ற நூல். அதாவது தொழுகைக்கு தாமதமாக வந்து பதட்டத்துடன் மற்றவர்களைத் தாண்டிச் சென்று தொழுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது இதன் பொருள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32 மணி