Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 20ம் தேதி மாளிகைப்புறத்தில் குருதி ... பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்! பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக சுற்றுலா பட்டியலில் மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில்!
எழுத்தின் அளவு:
உலக சுற்றுலா பட்டியலில் மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில்!

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
11:01

புதுடில்லி : சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் 2016ம் ஆண்டில் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. நியூயார்க் டைம்ஸ் வெயிட்டுள்ள சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் பட்டியலில் 52 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகம் 24வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பற்றி குறிப்பிட்டுள்ள நியூயார்க் டைம்ஸ், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முதல் செட்டிநாடு உணவு வரை குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தின் பெருமைகளை பற்றியும் மிக உயர்வாக எடுத்துரைத்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில்
: தமிழகத்தை பற்றி நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ள குறிப்பில், வட இந்தியாவில் முகலாயர் காலத்து அரண்மனைகளும், கோட்டைகளுமே இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக உள்ளன. ஆனால் தென்னிந்தியாவில் தமிழகம், வடஇந்தியாவிற்கு இணையான பிரம்மாண்டத்தையும் கண்டறியப்படாத வரலாறுகளும் உள்ளன. இந்தியாவில் மிக அதிகமான கோயில்களும், கலாச்சார பெருமைகளும் தமிழகத்தில் நிறைந்துள்ளது. பல ஊர்கள் பெரியதாக இருந்தாலும் அவைகள் குறுநகரங்களாகவே கருதப்படுகின்றன. மதுரையில் மீனாட்சி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள மீனாட்சி கோயில் மிக பரந்து விரிந்துள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், இந்தியாவின் மிகச் சிறந்த, பழமையான வம்சாவளியான சோழர்களால் கட்டப்பட்டது.

வாழை இலை விருந்து: பல நூறு கோயில்கள் தமிழக கிராமங்களில் அமைந்துள்ளன. இவற்றில் வரையப்பட்டுள்ள குகை ஓவியங்கள் 9ம் நூற்றாண்டை சேர்ந்தவை. கோயில்கள் மட்டும் கலாச்சாரத்தை போற்றுபவைகள் அல்ல. செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பர்மா தேக்கினால் செதுக்கப்பட்ட வீடுகள் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. மசாலா சுவை மற்றும் நறுமணத்துடன் தமிழகத்தில் சமைக்கப்படும் உணவுகள் மற்றும் வாழை இலையில் பரிமாறப்படும் முறையும் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவை. தமிழகத்தின் மிக குறைந்த அளவிலான உள்கட்டமைப்பு சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனால் சமீப காலமாக பல பெரு நகரங்களுக்கு இணையாக தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் திறக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்த பாராட்டுக்கு சுற்றுலா துறையினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நியூயார்க் டைம்ஸ் 2014 ம் ஆண்டு வெளியிட்ட சிறந்த சுற்றுலா நகரங்களின் பட்டியலில் சென்னை மட்டுமே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தெப்பல் உற்சவத்தில், சண்முக சுப்ரமணியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar