பதிவு செய்த நாள்
11
ஜன
2016
11:01
உளுந்தூர்பேட்டை: பாதூர், ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில், மார்கழி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கரா தேவி கோவிலில் மார்கழி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் உள்ளிட்டவை öŒலுத்தப்பட்டது. பின் கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சலக் குருக்கள் தலைமையில், யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் இடப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி வெற்றிலையில் கோரிக்கைகளை எழுதி, யாக குண்டத்தில் செலுத்தினர்.யாககுண்டத்தில் ஏராளமான புடவைகள் மற்றும் துணிகள், தாலி, வலையல்கள் சாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பழ வகைகள், பால், தயிர், நெய் போன்றவை குண்டத்தில் இட்டு, தீபாராதனை நடந்தன. ஸ்ரீ பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகும்பலா யாகத்தில், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.