ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கங்கைநதியை பாதுகாக்க வேண்டி ருத்ர ஜபம் நேற்று நடந்தது. ராமநாதசுவாமி,பர்வதவர்த்தனி அம்பாளுக்கு கங்கா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கங்கை பாதுகாப்பு குழு அகில பாரத பொறுப்பாளர் சுர்ஜித்தாஸ் குப்தா, பா.ஜ., தேசியகுழு உறுப்பினர் முரளீதரன், விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் நாகராஜன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ராமேஸ்வரம் நகர் தலைவர் மாரியப்பன், பொறுப்பாளர் நம்புராஜன், மண்டபம் ஒன்றிய தலைவர் தனபாலன், நகராட்சி கவுன்சிலர் சுந்தர், ஆர்.எஸ்.எஸ்.பொறுப்பாளர் தட்சினாமூர்த்தி, பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட அமைப்பாளர் பாரதிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.