ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் ராமர் பட்டாபிஷேக வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2016 11:01
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அனுமத் ஜெயந்தி விழாவையொட்டி ராமர் பட்டாபிஷேக வழிபாடு நடந்தது. அதிகாலையில் மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கான வாயுஸ்துதி பாராயணம், சகஸ்கரநாம அர்ச்சனை, பெண்களின் பஜனை வழிபாடு நடந்தது. பின்னர் மகாதீபாராதனை, அர்ச்சனை வழிபாடு அன்னதானமும் நடந்தது. மாலையில் ராமர், லட்சுமணர், சீதை பட்டாபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின் மூவரும் ஆஞ்சநேயர் சகிதமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றனர். மீண்டும் கோயிலை வந்தடைந்தபோது பக்தர்கள் பூக்களை தூவி, பஜனை வழிபாடு செய்து வரவேற்றனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.ஏற்பாடுகளை ஜெய்மாருதி பக்தசபா தலைவர் சங்கர், செயலாளர் சதீஸ்குமார், பிரசன்னா, கண்ணன் நவநீதகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் செய்தனர்.