சென்னை : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நங்கநல்லுார் ஆதிவியாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில், உலக நன்மை வேண்டி, 31ம் தேதி துவங்கிய ஆஞ்சநேயர் லட்சார்ச்சனை இன்றுடன் முடிகிறது. அனுமன் ஜெயந்தியான நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு காலசந்தி; 8:00 மணிக்கு, சகஸ்வர நாம அர்ச்சனை; மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை முதல் இரவு, 9:00 மணி வரை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். இன்று இரவு சீதா சமேத ராமபிரான், அனுமர் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடக்கிறது.