பொங்கல் என்பது ஒரு உணவின் பெயர் என்றாலும், இதுவே பண்டிகையின் பெயராகவும் இருக்கிறது. பொங்குதல் என்னும் சொல்லே பொங்கல் எனப்படுகிறது. பானையில் பொங்கலிடும் போது பெண்கள் குலவையிடுவர். அதை தொடர்ந்து பெரியவர்கள், சிறுவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவர். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வ வளம் என எல்லா நன்மைகளும் பொங்கிப் பெருக வேண்டும் என்பதை வெளிப்படுத்தவே இப்படி சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. மந்திரச் சொல்லான பொங்கலோ பொங்கல் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் போது அந்த ஊரே சுபிட்சமும், நன்மையும் பெறும்.