Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5000 ஆண்டுகளுக்கு முன்பே ஏறு தழுவுதல் ... ஹஜ் யாத்திரை பயணிகளுக்கு தனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை கோவிலில் அமர்வு தரிசனத்திற்கு ரூ.250 கட்டணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2016
11:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அமர்வு தரிசனத்திற்கு, 250 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொதுமக்கள் ஆட்சேபனை இருந்தால், எழுத்து பூர்வமாக கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம், என, கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், சுவாமி தரிசனத்துக்காக பக்தர்களை அனுமதிக்க இலவச தரிசனம், 20 ரூபாய் கட்டண தரிசனம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பவுர்ணமி நாட்களில் மட்டும், 50 ரூபாய் கட்டண தரிசனம் அனுமதிக்கப்படுகிறது, மேலும், தினமும், சுவாமி மற்றும் அம்மனுக்கு நடக்கும் அபிஷேக காலத்தில், அமர்வு தரிசனம் செய்ய, ஒரு நபருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்யும் நேரத்திற்கும், இலவசமாக தரிசனம் செய்யும் நேரத்திற்கும் சிறிய அளவிலான கால இடைவெளியே உள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்கைள் அவதிப்படுகின்றனர். இவர்கள் வசதிக்காக, பவுர்ணமி நாட்களில், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி சுவாமி சன்னதியில், முதல் பிரகாரத்தில் துர்க்கையம்மன் கேட் வழியாகயும், 20 ரூபாய் கட்டணம் செலுத்தி அம்மனை தரிசிக்க, சண்டிகேஸ்வரி அம்மன் கேட் வழியாக அனுமதிக்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சாதாரண நாட்களில் அபிஷேகம் அல்லாத நேரத்தில், சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் அமர்வு தரிசனம் செய்ய, ஒரு நபருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தரிசன முறைகளில் மாற்றங்களை செய்ய இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்கான புதிய நடைமுறைகள் மற்றும் கட்டணத்தை முறைப்படுத்துதல் தொடர்பாக, பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், வரும், 31ம் தேதிக்குள், எழுத்து மூலமாக கோவில் நிர்வாக அலுவலகத்தில் தெரிவிக்கலாம், என, கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar