நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் வரும் 17ம் தேதி கரிநாள் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 10:00 மணிக்கு விநாயகர்,வள்ளி தேவசேனா சுப்ரமணியர், காளியம்மன், ராஜராஜேஸ்வரி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், புஷ்ப பிரபையில் வள்ளி தேவசனோ சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. 18ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு கோவிலில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் உற்சவம் நடக்கிறது.