பதிவு செய்த நாள்
16
ஜன
2016
02:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி தங்க விமான கும்பாபிஷேகத்தை
முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் இன்று முதல் துவங்குகிறது. (ஜன.,16) காலை 8 மணிக்கு
ஆச்சார்யர்கள் வடபத்ரசயனர் சந்நிதியில் பிரார்த்தனை செய்து, ஆண்டாள் சந்நிதியில்
மகாசங்கல்பம் செய்யபட்டு, நந்தவனத்தில் பூஜைக்காக மண்ணெடுத்து பாலிகையிட்டு, 27
ஓமகுண்டத்திலும் அக்னி ஆராதனை செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு அங்குரார்பணம், கும்ப பூஜா, சக்தி ஸங்கர்ஷணம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார்,கருடாழ்வார் யாகசாலையில் எழுந்தருளி முதல் கால பூஜைகள் நடக்கிறது. 19 ம் தேதி காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. ஜன.20 புதன்கிழமை காலை 10.05 மணிக்கு ஆண்டாள் சன்னதி தங்கவிமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் சேவை நடக்கிறது.
ஏற்பாடுகளை நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் தலைவர் ராமசுப்பிரமணியராஜா, தக்கார் ரவிசந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், செயல்அலுவலர் ராமராஜா ஆகியோர் செய்துள்ளனர். ராஜபாளையம் சங்கரேஸ்வரன் டி.எஸ்.பி., தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.