பதிவு செய்த நாள்
16
ஜன
2016
02:01
ஈரோடு: ஈரோடு தெப்பக்குளம் வீதி தில்லைநகர், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் தை மாத திருவிழா, (ஜன.,15) முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை சக்தி
அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
காரைவாய்கால் மாரியம்மன் கோவில் முன் தொடங்கிய இந்த ஊர்வலத்தில், ஐம்பதுக்கும்
மேற்பட்ட வீர குமாரர்கள், உடம்பில் கத்தி போட்டபடி ஊர்வலமாக வந்தனர். கோவிலின் காவல் தெய்வமான வீரமுட்டி வேடமணிந்து இருவர் ஊர்வலத்தில் வந்தனர். இவர்களிடம் கைக் குழந்தைகளை கொடுத்து பய உணர்வு வரக்கூடாது என வேண்டி, பெண்கள் ஆசி பெற்றனர். ஆக்ரோஷமாக ஆடி வந்த வீரகுமாரர்களை காண வழிநெடுகிலும் மக்கள் குழுமியிருந்தனர். காரைவாய்கால் மாரியம்மன் கோவில் முன் தொடங்கிய ஊர்வலம், கச்சேரி வீதி, சின்னமாரியம்மன் கோவில் வீதி, பொன்வீதி, பி.எஸ்., பார்க், தெப்பக்குளம் வீதி, வழியாக
கோவிலை வந்தடைந்தது. அதன் பின் விஷேச பூஜை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
மாலையில் ராகு தீபஜோதி மெரவணை நடந்தது. இன்று மகா அபிஷேகம் மற்றும் மறு
பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.