Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச (ஜன.,15) ... அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாட்டுபொங்கல் முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம்! அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2016
03:01

ஆலயங்கள் ஒரு சமயத்தில் அழியாச் சின்னங்களாகவும், அன்றாட மக்கள் வாழ்க்கை நெறியை வழிபடுத்திச் செல்வதாக இருந்தன.

இதற்கு சான்றாக, புதுச்சேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்திருந்தது, தேடி வரும்
பக்தர்களை காக்கும் கடவுளாக இக்கோவில் பெருமாள் விளங்கியதோடு, ஆபத்து காலங்களில்
பிற கோவில்களின் சுவாமி விக்ரகங்களை பாதுகாத்த பெருமையும், இக்கோவிலுக்கு உண்டு.

தல வரலாறு:
கோவில் அமைந்துள்ள இடம் முன்பு அரச மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது. அங்கு, ஸ்ரீ நரசிங்க பெருமானை ஆராதனை மூர்த்தியாக கொண்டு, சிறிய கோவில் எழுப்பி, மக்கள் வழிபட்டனர். பின், அடியார்களின் முயற்சியால், இக்கோவில் படிப்படியாக பெருங்கோவிலாக உருவெடுத்தது. ஸ்ரீவரதராஜ பெருமாள் மூல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கோவில் உருவானபோது, முதன் முதலாக பொது மக்களால் வணங்கப்பட்ட நரசிங்க பெருமாள் விக்ரகம், வரதராஜ பெருமாள் சன்னதியின் சுற்றுப்பிரகாரத்தில், மேற்கு திசை நோக்கிய இடத்தில் உள்ளது.

சிலைகளை காத்த பெருமாள்: புதுச்சேரியில் 1748ம் ஆண்டு செப்., 8 ம் தேதி, வேதபுரீஸ்வர் கோவில் பிரெஞ்சுக்காரர்களால் அழிக்கப்பட்டதாகவும், அப்போது, இடிபாடுகளுக்கிடையே இருந்த சுவாமி விக்ரகங்கள், பூஜை பொருட்களை, ஆனந்தரங்கப் பிள்ளை என்பவர் மீட்டு, வரதராஜ பெருாள் கோவிலில் வைத்து பாதுகாத்ததாக, அவரது நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்னாட்டில் முஸ்லிம்கள் படையெடுப்பின் போது, பல்வேறு இந்து கோவில்கள்
இடிக்கப்பட்டன. அப்போது, தீவனுார், செஞ்சி உட்பட பல கோவில்களின் சுவாமி விக்ரகங்கள்,
புதுச்சேரி கொண்டு வரப்பட்டு, வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டதாக
வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இதில் இருந்து, இக்கோவிலின் தொண்மையை உணர முடிகிறது. இக்கோவிலின் சம்ரோக்ஷணம் வரும் 20ம் தேதி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar