Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்காமீஸ்வரர் கோவில் ... கும்மி, தெம்மாங்குடன்பூ எருவாட்டி திருவிழா கும்மி, தெம்மாங்குடன்பூ எருவாட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
11:01

புதுச்சேரி அருகே வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான சுவாமிகள், கடற்கரையில் எழுந்தருள செய்து தீர்த்தவாரி நடக்கிறது. இப்பெரு விழா நடப்பதற்கு, வரதராஜ பெருமாள் கோவில் கோதண்டராமரே காரணம்.வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய கருங்கல் தொட்டி கரை ஒதுங்கியது. அதில் ஸ்ரீ ராமர், சீதாபிராட்டி, லட்சுமணன், அனுமன், நவநீத கிருஷ்ணன், சந்தானகிருஷ்ணன், வேணுகோபாலன், சக்கரத் தாழ்வார் சுவாமி விக்ரகங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அப்பகுதியினர் இந்த விக்ரங்கங்களை வரதராஜ பெருமாள் கோவிலில் ஒப்படைத்தனர். வரதராஜபெருமாள் கோவிலில், வடக்கு பகுதியில் தனி கோவில் எழுப்பி, ராமர், சீதாபிராட்டி, லட்சுமணன், அனுமன் ஆகியோரை வைத்து வழிபாடு செய்தனர். 1893ம் ஆண்டு புதுச்சேரி கலவை கிருஷ்ணசாமி செட்டியார் என்பவர் திருக்கோவிலுக்கு ஜீர்ணோத்தரமும், ராமனுக்கு திருமண கைங்கரியமும், வெள்ளி கருட வாகனமும் செய்து அளித்தார். பின், புதுச்சேரி ரத்தின வியாபாரியான கோவிந்த செட்டியார், ஆன்மிக அன்பர்கள் உதவியுடன் கருங்கல் கோதண்டராமர் சிலை செய்து, 1914ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார். அதற்கு தங்கக்கவசம் அளித்ததோடு, வரதராஜபெருமாள் சந்நதியிலும் சம்ப்ரோஷணம் நடந்தது. ஸ்ரீராமர் உள்ளிட்ட விக்கிரங்கள் கிடைத்த வைத்திக்குப்பம் கடற்கரையில், மாசிமக விழா நடத்த மக்கள் விரும்பினர். இதனால் 1902ம் ஆண்டு முதல் மாசிமக திருவிழா துவக்கி, இன்றும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar