இறைவனே உலகிலுள் அனைவருக்கும் உணவளிக்கிறான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஒரு ஞானி. கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவன் அவரிடம் வந்தான். ஞானியே! கடவுளே அனைவருக்கும் உணவு தருவதாகச் சொல்கிறீர்களே! உங்களுக்கு என்னைப் போன்ற சிலர் அல்லவோ உணவு தருகிறார்கள். மக்களிடம் வாங்கிசாப்பிடும் தாங்கள், அதை இறைவன் தருவதாகச் சொல்வது நன்றி மறந்த செயல் ஆகாதா? என்றான். அதற்கு ஞானி, இல்லை அன்பரே! இறைவன் எனக்கு மட்டுமல்ல, உமக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கிறான், என்றார். அப்படியானால், நான் ஒரு அறையில் உங்களை அடைத்து வைக்கிறேன். உங்களுக்கு இறைவன் உணவு தருகிறானா என்று பார்ப்போம், என்றான் இளைஞன். தம்பி! நீபுதிதாக என்னை அடைத்து வைக்க வேண்டியதில்லை. நான் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் வரை என் வீட்டில் சிறைப்பட்டு கிடந்தேன். அப்போது என்னால் நடக்க முடியாது. அப்போது, என் வாய்க்கே உணவு வந்தது. அப்போது நான் குழந்தை, என்றார். ஆம்... குழந்தையாக இருக்கும் போது, தாய் மூலம் இறைவன் உணவளிக்கிறான். நடப்பது எல்லாவற்றுக்குமே அவனே காரணம் என்பதை மறக்காதீர்கள்.