Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னமிட்ட கை! கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உடம்பிலும் வலி போச்சு! மனசிலும் வலி போச்சு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2016
02:01

எட்டு வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு, அழுது கொண்டேயிருந்தான். ஒரு கட்டத்தில் அழுகை அதிகமானது. பையனிடம் பெற்றோர் கேட்டதற்கு கழுத்தில் வலி கடுமையாக இருப்பதாகச் சொன்னான். குழந்தையின் தாயார் பையனை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார். டாக்டர் சோதித்து விட்டு, கழுத்து நரம்பில் பிரச்னை இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அந்த தாயாருக்கோ பணக்கஷ்டம். கழுத்தில் கத்தி வைத்தால் என்னாகுமோ என்ற பயமும் ஏற்பட்டது. அவர் தன் அண்ணியை அழைத்தார். அண்ணி... காஞ்சிப் பெரியவருன்னு சொல்வாங்களே... அவர் கிட்ட ரொம்ப சக்தி இருக்கிறதா சொல்றாங்களே.. நாமும் குழந்தையை அழைத்துக் கொண்டு அங்கே போய் அவரை தரிசித்து பிள்ளையைப் பற்றிக் கேட்டு வரலாம் என்றார்.  இருவருமாக தங்களின் சொந்த ஊரான செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் சென்றனர். அவர்கள் சென்ற அன்று மகாபெரியவர் மவுன விரதத்தில் இருந்தார். அன்று அவர்காஷ்ட மவுனம் அனுஷ்டித்தார். அதாவது ஜாடையாக கூட பேச மாட்டார். இவர்கள் பெரியவரை ஒரு வழியாக தரிசித்து பிரச்னையைச் சொன்னார்கள். அவர்கள் சொன்னதைக் காது கொடுத்து கேட்டாரே தவிர, பதிலேதும் சொல்லவில்லை. தன் கழுத்தை தடவிக் கொண்டே உள்ளே போய் விட்டார். அந்த பையனின் தாயாருக்கு மிகவும் ஏமாற்றம். ஒரு வார்த்தை கூட பேசாமல், ஜாடை கூட காட்டாமல் சென்று விட்டதை எண்ணி வருத்தப்பட்டார். மறுநாள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தார்கள். டாக்டரும் சென்று அறுவை சிகிச்சைக்கு தேதியும் குறித்து விட்டனர். திடீரென அந்த சிறுவன்,அம்மா... தொண்டையில் என்னவோ போலிருக்கு என்றான். சிறுவனின் தாயார் கலங்கி விட்டார்.கண்ணா...என்னடா ஆச்சு? என்று விசாரித்தார். அப்போது குழந்தை வாந்தி எடுத்தான். தொண்டையில் இருந்து தேங்காய் ஓடு சில்லாக வெளியே வந்து விழுந்தது. சற்று நேரத்தில் நிம்மதி பெருமூச்சு விட்டவனாக, அம்மா... சரியாயிடுத்து என்றான். என்றாலும், மறுநாள் மருத்துவமனைக்குப் போனார்கள். டாக்டர் கழுத்தில் கை வைத்து அழுத்தி, வலிக்கிறதா? என்று கேட்டார். கொஞ்சம் கூட இல்லை என்று பதிலளித்தான் சிறுவன். அறுவை சிகிச்சை தேவையில்லை என்று டாக்டரும் சொல்லி விட்டார். பையனுக்கு உடலில் வலி போச்சு! பெற்றவர்களுக்கு மனசில் வலி போச்சு! அதன்பின் அந்த குடும்பத்தினர் பெரியவரின் நிரந்தர பக்தர்களாகி விட்டனர்.  (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar