சித்தானந்தா சுவாமி கோவிலில் நாளை ஆவணி அவிட்ட நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2011 12:08
புதுச்சேரி : கருவடிக்குப்பம் சித்தானந்தாசுவாமி கோவிலில் நாளை (13ம் தேதி) ரிக், யஜூர் வேதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆவணி அவிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. காலை 5 மணி முதல் 12 மணி வரை 1 மணி நேரத்திற்கு ஒவ்வொரு பிரிவாக பூணுல் மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 14ம் தேதி காலை 5.30 மணிமுதல் 7 மணி வரை காயத்திரி ஜெபம் நடக்கிறது. ரிக், யஜூர் வேதத்தைச் சேர்ந்தவர்கள் சித்தானந்தசுவாமி கோவிலில் நடக்கும் ஆவணி அவிட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான தகவலுக்கு 98423-29770 ஆகிய மொபைல் எண்களில் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை வேதசாம்ராட் ராஜாசாஸ்திரிகள் தெரிவித்தார்.