திருக்கோவிலுார் ராமானுஜர் கோவிலில் திருநட்சத்திர வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2016 12:01
திருக்கோவிலுார்: தேவனுார் மலைக்குன்றில் அமைந்துள்ள, ராமானுஜர் கோவிலில் திருநட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த தேவனுார் மலைக்குன்றில், ராமானுஜர் கோவில் அமைந்துள்ளது. அவரது திருநட்சத்திர தினமான நேற்று, இந்து மக்கள் கட்சி சார்பில், சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களின் பஜனையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் மணி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ராமானுஜரின் கோட்பாடுகளை விளக்கினார். ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.