Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ... திருக்கோவிலுார் ராமானுஜர் கோவிலில் திருநட்சத்திர வழிபாடு திருக்கோவிலுார் ராமானுஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனூர் அஸ்திரபுரீஸ்வரருக்கு எப்போது கும்பாபிஷேகம்?
எழுத்தின் அளவு:
ஆனூர் அஸ்திரபுரீஸ்வரருக்கு எப்போது கும்பாபிஷேகம்?

பதிவு செய்த நாள்

23 ஜன
2016
12:01

பல்லவர் காலத்தைச் சேர்ந்த, வரலாற்று சிறப்புமிக்க அஸ்திரபுரீஸ்வரர் கோவிலில், திருப்பணிகள் துவங்கி உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை,திருப்பணிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் இருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ளது ஆனுார். இந்த ஊரில் சிவன் கோவில் உள்ளது. இந்த தலத்தில் தான், அர்ஜுனனுக்கு, சிவபெருமான் பாசுபதாஸ்திரம் பெற்றதாக ஐதீகம். அதனால், சிவனுக்கு, அஸ்திரபுரீஸ்வரர் என்று பெயர். விரைவில் நிதிஇந்த ஊருக்கு அன்னியூர், ஆனியூர், ஆதியூர், சத்யாச்ரய குலகால சதுர்வேதிமங்கலம் என பல பெயர்கள் இருந்துள்ளன. 1933ம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்வெட்டு ஆண்டு அறிக்கையில், திருவம்பன்காட்டு மகாதேவர் என்ற பெயரில், இந்த தலத்து இறைவன் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த கோவிலை, கி.பி., 8ம் நுாற்றாண்டில், பல்லவ மன்னன் விஜயகம்ப வர்மன் கட்டினான். மேலும், பராந்தக சோழன், ராஜராஜன் மற்றும் குலோத்துங்க சோழன் ஆகியோரும், பின்னாளில் நாயக்க மன்னர்களும் பல திருப்பணிகளை செய்துள்ளனர் என்பது, இங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக தெரியவருகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்துார் கோட்டம், களத்துார் நாட்டு ஆதனுார் என, கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

பிரம்மாண்ட நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த கோவில், முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஒரு கால பூஜை மட்டும் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, 28 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. விரைவில் நிதி ஒதுக்கப்படும் என, இந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஊர்மக்கள் ஒன்றிணைந்து திருப்பணிகளை துவக்கி உள்ளனர். திருப்பணி பாதிக்கக்கூடாதுஇதுகுறித்து, ஆனுார் தேவராஜன் கூறியதாவது:பல ஆண்டுகளாக பாழடைந்து இருந்த இந்த கோவிலில், ஊர்மக்கள், உபயதாரர்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கருவறை, மண்டபம் மற்றும் தரைத்தளம் ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறையால், திருப்பணி பாதிக்கப்படக் கூடாது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். இந்து சமய அறநிலையத் துறையினரும், நிதி ஒதுக்குவதற்கான பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் சிறப்பு: மூலவர்அஸ்திரபுரீஸ்வரர்அம்பிகைசவுந்திரவல்லிசிறப்புகள்மதில் சுவரில், கி.பி., 6ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பழமையான விநாயகர் புடைப்புச் சிற்பம் உள்ளது. அந்த சிற்பத்திற்கு அருகிலேயே, ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பமும் உள்ளது. மேலும் கி.பி., 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தட்சிணாமூர்த்தி, இங்கே கல்லால மரம், முயலகன், சனகாதி முனிவர்கள் இல்லாமல் இருக்கிறார். அதேபோல் பைரவரும் நாய் இல்லாமல் காட்சி தருகிறார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar