பதிவு செய்த நாள்
23
ஜன
2016
12:01
கரூர்: காந்திகிராமம் தெற்கு சக்திநகர் தென்புறம் அமைந்துள்ள வள்ளலார் கோவிலில், நாளை மகா அன்னதான விழா, தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு நடக்கிறது. கரூர் மாவட்டம், காந்திகிராமம் தெற்கு சக்தி நகரில், வள்ளலார் நகரில் எழுந்தருளியிருக்கும் திருட்பிரகாச வள்ளலார் ஜோதி நிலையத்தில், 16ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடக்கிறது. விழா முன்னிட்டு ஜோதி வழிபாடும், மகா அன்னதானமும் நாளை காலை, 8 மணி முதல் மாலை, 4 மணி வரை நடக்கிறது. விழாவில், வடக்குப்பாளையம் ரைஸ் மில் அம்மயைப்பன் தலைமை வகிக்கிறார். ஆரா இண்டர்நேஷனல் நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி அன்னதானத்தை துவக்கி வைக்கிறார். வடலூரான் சமரச சன்மார்க்க அறக்கட்டளை தலைவர் ராசப்ப்பன் காலை, 6 மணியளவில் அருள்ஜோதியை ஏற்றி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், வெண்ணைமலை சபரீசன் சித்தாஸ்ரமம் பொன் பாண்டு ரங்க ஸ்வாமிகள், நெரூர் கைலாச ஆஸ்ரம ஆன்மிக குரு தலைவர் சுவாமி சிதாபானந்தா, கரூர் சன்மார்க்க சங்க பொது சமய தலைவர் ராமசாமி மற்றும் பலர் பங்கேற்கின்றனர். அன்று காலை, 11 மணிக்கு, மனிதனும் தெய்வமாகலாம் என்ற தலைப்பில் வள்ளலார் ஞான சபை அமைப்பாளர் கண்ணன் பேசுகிறார்.