மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2016 12:01
திருவாடானை: பெருமாள் கோயில் திருப்பணியின் போது மண்ணுக்கடியிலிருந்து மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒபந்படைக்கவேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்..திருவாடானை அருகே திருவெற்றியூரில் பழமைவாய்ந்த மாதவபெருமாள் கோயிலில் திருப்பணி வேலைகள் துவங்கியுள்ளது. இதற்காக கோயிலின் அருகில் மண் தோண்டியபோது 3 ஐம்பொன் சிலைகள் தென்பட்டது. அவற்றை தொழிலாளர்கள் பத்திரமாக வெளியே மீட்டனர். மாதவபெருமாள், ஸ்ரீதேவி, பூ தேவி ஆகிய 3 உற்சவமூர்த்தி சிலைகளையும், திருவிழாவின்போது பல்லக்கில் வைத்து வீதியுலா நடத்துவது வழக்கம். நாளடைவில் 3 சிலைகளும் மண்ணுக்குள் புதையுண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மீட்கபட்ட 3 ஐம்பொன் சிலைகளும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. சென்னை அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதியினர், சிலைகளை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து திருவெற்றியூர் வன்மீகநாதன் கூறுகையில்,"" மிகவும் பழமை வாய்ந்த சுவாமி சிலைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும். திருவிழாவின்போது உற்சவ மூர்த்தி சிலைளை பல்லக்கில் வைத்து வீதியுலா நடத்துவது வழக்கம், என்றார்.