சர்வ சக்தி விநாயகர் கோவிலில் 29ம் தேதி கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2016 01:01
கடலுார்: கடலுார், அண்ணா நகர் சர்வ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு வரும் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மதியம் 3:00 மணிக்கு கரிக்கோலம், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, 26ம் தேதி காலை 7:00 மணிக்கு சுதர்சன ேஹாமம், தன்வந்திரி ேஹாமம், விக்ரஹங்கள் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றப்படுகிறது. 27ம் தேதி மாலை யாக பூஜை துவங்குகிறது. மறுநாள் 28 ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 29ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து காலை 9.00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.