மதுரை: மதுரை சத்குரு சங்கீத சமாஜம் சார்பில் சத்குரு ஸ்ரீதியாகராஜ உற்சவம் ஜன., 27, 28 மற்றும் 29 தேதிகளில் நடக்கிறது. தினமும் மாலை 5.30 முதல் இரவு 7.00 மணி வரை, இளங்கலைஞர்களின் இசைக் கச்சேரிகள், தொடர்ந்து இரவு 7.00 முதல் இரவு 9.00 மணி வரை சிறப்பு கச்சேரிகள் நடக்கின்றன. ஜன., 28 காலை உஞ்ச விருத்தி, பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டி கானம், ஸ்ரீதியாகராஜ ஆராதனை, ஜன., 29 இரவு 8.00 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது.