நெல்லிக்குப்பம்: வெள்ளப்பாக்கம் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் சிவகாம சுந்தரி சமேத சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி சிறப்பு யாகம், அபிஷேகம் நடந்தது. சிவகாம சுந்தரி சிவலோக நாதர், வள்ளி, தெய்வானை முருகர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிவகான பூதகன நாத கயிலாய இசை திருகூட்டத்தினரின் வாத்திய நிகழ்ச்சி நடந்தது. நெல்லிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி கணபதி, சன்னமதி, நவக்கிரக ேஹாமங்கள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.