திருமலைக்கேணி : திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பகல் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வெளி பிரகாரத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். * சாணார்பட்டி அருகே உள்ள சுவாமிநாதபுரம் பாலமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.