நத்தம் : நத்தத்தில் அரண்மனை சந்தன கருப்பு கோயிலில் தைத்திருவிழா நடந்தது. கடந்த ஜன.19ல் கொடியேற்றம், தோரணமரம் ஊன்றுதலுடன் விழா தொடங்கியது. நேற்று பகலில் சுவாமிக்கு கண் திறப்பும், சுவாமி புறப்பாடும் நடந்தது. இன்று (ஜன.25) அரண்மனை பொங்கல் வைத்தல், கிடா வெட்டு மற்றும் அன்னதானம் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராற்றுடன் விழா நிறைவு பெறுகிறது.