காளையார்கோவில் : உருவாட்டி பெரியநாயகி அம்மன்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 6மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம்,மாலை 5மணிக்கு திருவிளக்கு பூஜை,நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தனர், அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை உருவாட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.