இளையான்குடி : தாயமங்கலம் அருகே வில்லிசேரி புனித செபஸ்தியார் ஆலயத்தில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.தினமும் திருப்பலி நடந்தது. ஜன.23 இரவு 7மணிக்கு பாதிரியார் ஜான் பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி,இரவு 9மணிக்கு தேர் பவனி,இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலியுடன் திருவிழா முடிந்தது.