பனைக்குளம் : உச்சிப்புளி அருகே அரியமான் உக்கிர பிரத்யங்கிரா கோயிலில் தை பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்கான விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை, குங்கும அர்ச்சனை, சக்தி ஸ்தோத்திரம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் பழனிவேலு, மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.