பதிவு செய்த நாள்
27
ஜன
2016
11:01
மயிலம்: மயிலம் ஸ்ரீவள்ளி, தெய்வானை, சுப்பரமணியர்சுவாமி கோவிலில் நேற்று காலை 61ம் ஆண்டு திருப்படி விழா, திருவிளக்கு பூஜை நடந் தது. விழாவை முன்னிட்டு காலை 6 :00 மணிக்கு மயிலம் அக்னி குளக்கரையிலுள்ள விநாயகருக்கு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பின் பஜனைக் குழுவினர் மலைக் கோவிலுக்கு புறப்பட்டனர். பின் மலைக்கு செல்லும் வழியிலுள்ள திருப்படிகளை பெண்கள் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்தனர். ஒவ்வொரு படிக்கும் சூடம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். மலைக் கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர் , வள்ளி, தெய்வானை, சுப் பரமணியருக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 7:00 மணிக்கு மயிலம் அதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள்ஆசியுரை வழங்கினார். மயிலம் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசு அறிமுகவு ரையாற்றினார். மேலமங்கலம் குமாரசாமி தம்பிரான் திருவிளக்கு வழிபாட்டின்பயன்கள் குறித்து பேசினார். கோவில் மண்டபத்தில் காலை 9:00 மணிக்கு 450 பெண்கள் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். விழுப்புரம் வள்ளியம்மை திருப்புகழ் சபை, கண்டாச்சிபுரம் கோலாட்ட குழுவினர், பெரும்பாக்கம், சென்னகுணம், வளையாம்பட்டு, மேலமங்கலம், பஜனை கச்சேரி குழுவினர் கலந்து கொண்டனர்.