விழுப்புரம்: சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகஆராதனை நடந்தது. விழுப்புரம் வழுதரெட்டி, ஸ்ரீ அகிலாண்÷ டஸ்வரி சமேத சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை விழா நடந்தது. விழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமி, நந்தி, விநாயகர், முருகன் சுவாமிகளுக்கு பால், இளநீர், விபூதி உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து, சுயம்பு லிங்கேஸ்வர சுவாமிக்குஆராதனைகள் செய்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.