திருநெல்வேலிக்கு அருகே தாமிரபரணி நதிக்கரையில் திருநாங்கோயில் உள்ளது. இங்குள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலின் கொடிமரம் கருடர் சன்னிதியை அடுத்து அமைந்துள்ளது. இதனை கம்பத்தடியான் என்று அழைக்கின்றனர். இதற்கு அபிஷேகமும், பூஜையும், பாயச நைவேத்யமும், பூப்பாவாடை சாத்துதலும் செய்து வியாதிகளில் இருந்து விடுபடுகின்றனர் பக்தர்கள்.