ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தின் மீது வைக்க உள்ள கலசங்கள் ஆய்வு செய்யப்பட்டது ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளதால், திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி ராஜகோபுரம் மீது புதிதாக அமைத்திட ஈரோட்டில் 6.5 அடி உயரத்தில் செப்பு கலசங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கலசங்கள் நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கலசத்தின் பீடம், உயரம், உள்ளிட்டவை அளந்து ஆய்வு செய்யப்பட்டது. திருப்பணிக்குழு தலைவர் பூமாலை சண்முகம், செயல் அலுவலர் சீனிவாசன், கோபுர கலசம் செய்யும் ஸ்தபதி ஈரோடு ராதாகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் உடனிருந்தனர்.