பதிவு செய்த நாள்
01
பிப்
2016
12:02
பொங்கலூர் : சின்னாரியபட்டி மங்களாம்பிகை உடனமர் மாதவீஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. சிவன் கம்பத்து ஈஸ்வரன் என்றழைக்கப்படும் மாதவீஸ்வரர் கோவில், பல ஆண்டுகளாக பூஜை நடைபெறாமல், சிதலமடைந்து காணப்பட்டது. சேக்கிழார் பேரவை சார்பில், சமீபத்தில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 29ல், தீர்த்தக்கலசம், முளைப்பாலிகை ஊர்வலம், புதிய சிலைகள் கோவிலுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை, 4:30க்கு விநாயகர் வழிபாடு, துவார பூஜை, வேதிகார்ச்சனை, சூர்யகும்ப பூஜை நடந்தது. தொடர்ந்து, விநாயகர் மற்றும் பரிவார கோபுரங்களுக்கும்; காலை, 9:15 மணிக்கு மேல், மாதவீஸ்வரர் சுவாமி, மங்களாம்பிகை கோபுர கும்பாபிஷேகமும் நடைபெற்றது.அலகுமலை அறங்காவலர் குழு தலைவர் சின்னு உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை, கண்டியன்கோவில் ஆதீனம் சிவசுப்ரமணி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மகா தரிசனம், மகா அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.