திருப்பதி: திருமலை ஏழுமலை யானுக்கு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, அதிகாரிகள் நேற்று கணக்கிட்டனர். காணிக்கையில், ஒரு பெட்டி இருந்தது; அதை திறந்து பார்த்த தில், வைரம் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பந்து இருந்தது. பந்தின் மேல், மராத்தி மொழி வார்த்தைகள் பொறிக்கப்பட்டு இருந்ததால், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் செலுத்தியிருக்கலாம் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித் தனர். அதன் மதிப்பு, 2.50 கோடி ரூபாய்.