பதிவு செய்த நாள்
01
பிப்
2016
12:02
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.,5ல் மூகூர்த்தகால் நடுதலுடன் துவங்கி 21 நாட்கள் நடக்கிறது. பழநி ஞானதண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட கிழக்குரத வீதியில் மாரியம்மன்கோயில் உள்ளது. மாசிதிருவிழா பிப்.,5 முதல் பிப்.,25வரை நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.,9ல் இரவு 10 மணிக்குமேல் திருக்கம்பம் சாட்டுதல் நடக்கிறது. இதைத்தொடர்ந்து கம்பத்திற்கு புனிதநீர், பால் ஊற்றியும், அக்னிச்சட்டிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிப்.,16ல் இரவு 7 மணிக்குமேல் இரவு 8.30மணிக்குள்கொடியேற்றம் மற்றும் தீச்சட்டிஎடுத்தல் மாரியம்மன் தங்கமயில் வாகனத்தில் உலாவருதல் நடக்கிறது. பிப்.,23 இரவு 7.30 மணிக்குமேல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணமும், பிப்.,24ல் மாலை 4.30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாநாட்களில் அம்மன் திருவுலா வந்துபக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பக்திசொற்பொழிவு, இசைசொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிப்.,25ல் இரவு 10 மணிக்குமேல் கொடியிறக்குதல் விழா நிறைவுபெறுகிறது.