பழநி,: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உண்டியலில் 14 நாட்களில் ரொக்கமாக ரூ. 2 கோடியே 72 லட்சத்து 44 ஆயிரம் கிடைத்துள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 14 நாட்களில் நிரம்பிய உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் தங்கம் 830 கிராம், வெள்ளி 20 ஆயிரத்து 900 கிராம், வெளிநாட்டு கரன்சி 708 மற்றும் ரொக்கமாக ரூ. 2 கோடியே 72 லட்சத்து 44 ஆயிரத்து 253 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், தொட்டில், செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் மற்றும் கோயில் அலுவலர்கள், வங்கிப்பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.