வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி ரேணுகாதேவி கோயிலில் உற்ஸவ விழா துவங்கியது. ஏழுநாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்மன் தினமும் ஒவ்வொரு கிராமத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் தனது இருப்பிடமான மூலக்கோயில் திரும்புவார். அன்று பொங்கல், மாவிளக்கு வழிபாட்டுடன் திருவிழா நிறைவு பெறும். இதனுடன் சேர்த்து சத்குரு தியாகராஜசுவாமிகளின் ஆராதனை விழா சேர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் நடைபெறும். இந்தாண்டு விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அம்மன் மூலவர் இருப்பிடமான குன்னுõர் கிராமத்திற்கு சென்று எழுந்தருளினார். இதை தொடர்ந்து அம்மனுக்கு பாலேட்டி பூஜை, சிறப்பு வழிபாடு, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மாலையில் அம்மன் குன்னுõரிலிருந்து புறப்பட்டு மீனாட்சிபுரம், சேஷபுரம் கிராமங்களில் எழுந்தருளினார்.