பதிவு செய்த நாள்
03
பிப்
2016
12:02
கல்லல்: கல்லல் தேவபட்டு அந்தரநாச்சி யம்மன் கோயில் விழாவில் ஆண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். காரைக்குடி அருகே கல்லல் தேவபட்டு கோயில் விழா 26-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தை மாத அறுவடைக்கு பின்பு, விளைச் சலுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் சங்கிலி கருப்பருக்கு, ஊர் மக்கள் மாலை, சீர் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர். எட்டாம் நாளான, நேற்று காலை மஞ்சு விரட்டு வாசல் அருகே கிராமத்து ஆண்கள் கூடி மண்பானையில் பொங்கல் வைத்தனர். அந்த பொங்கல் வழிபாடு நடத்திய பின், ஊர் மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் தேவபட்டு நாட்டார்கள், குடும்பமாக ஒன்று கூடி மாலை, சீர் முறையுடன் வந்து அம்மனை வழிபட்டனர். குழந்தை வரம் வேண்டி பெண்கள் கரும்பு தொட்டில் கட்டியும், கன்று வரம் வேண்டி ஈனாத மாடுகளை கோயில் முன்பு கட்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. மஞ்சு விரட்டு நடத்த போலீசார் தடை விதித்ததால், கோயில் மாடு மட்டும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏற்பாடு களை ஊர் தலைவர் நாராயணன் அம்பலம், ஊராட்சி தலைவர் கலாவதி செய்திருந்தனர். ஊருக்கு செல்லும் வழியில் உள்ள ஒவ்வொரு பனை மரத்திலும், இங்கு மது அருந்தவேண்டாம் என்ற வாசகம் ஊர் மக்கள் சார்பில் வைக்கப் பட்டிருந்தது. மஞ்சு விரட்டு மாடுகள் அவிழ்த்து விடப்படும் என்ற நம்பிக் கையில் பல் வேறு ஊர்களை சேர்ந்த மாடு பிடி வீரர்கள் வந்திருந்தனர். மாவட்ட எஸ்.பி., ஜியாவுல்ஹக் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந் ததால், மாடுகள் கொண்டு வந்தவர் களையும் போலீசார் அனுமதிக்கவில்லை.