ப.வேலூர்: ப.வேலூர் சுற்றுப் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. பொத்தனூர் அருணாசல ஈஸ்வரர், வேலூர் அங்காளம்மன் , நன்செய் இடையார் திருவல்லிங்கேஸ்வரர், கோப்பணம்பாளையம் அழகு நாச்சியம்மன், பாண்டமங்கலம் ஈஸ்வரர் கோவில்களிலும் காலபைரவருக்கு மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடனாக தேங்காய், நீர் பூசணிக்காய்களில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.