பதிவு செய்த நாள்
03
பிப்
2016
12:02
ஓமலூர்: ஓமலூர் தொளசம்பட்டியில், நாகர் ஸ்வாமி, முத்துக்குமார ஸ்வாமி கோவில் விழா நேற்று துவங்கியது. ஓமலூர் தாலுகா தொளசம்பட்டியில், நாகர் ஸ்வாமி, முத்துக்குமார ஸ்வாமி கோவில் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை தை மாதம் துவங்கும் இவ்விழா, நேற்று துவங்கி வரும், 5ம் தேதி வரை நடக்கிறது. நேற்று, ஏரிக்கரை அருகேவுள்ள நாகர் கோவிலில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று இரவு, மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட மகாமேருவில், நாகர் ஸ்வாமி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார். தொடர்ந்து, 5ம் தேதி வரை ஒவ்வொரு நாளும், சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை, வான வேடிக்கை, ஸ்வாமி ஊர்வலம் நடக்கிறது.