சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும், இன்று, 319 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. சென்னையில், 32 கோவில்களில், சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.