புதுச்சேரி : வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சகலதேவதா ஹோமங்கள் நடந்தன. புதுச்சேரி காந்தி வீதி-காமாட்சியம்மன் கோவில் வீதி சந்திப்பில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆர்ய வைஸ்ய யுவஜன சேவா சங்கம் சார்பில் அம்மனுக்கு சஹஸ்ர காயத்ரி மற்றும் சகல தேவதா ஹோமங்கள் நடந்தன. காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், 11 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மந்திர புஷ்பம், 11.30 மணிக்கு கலச அபிஷேகம், தீபாராதனை, 12 மணிக்கு சமாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.