Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் திரவுபதி அம்மனுக்கு 108 ... ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் ஜீர்ணோத்தாரண ஹோமங்கள் ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

05 பிப்
2016
11:02

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. கடந்த ஜன., 27 ந்தேதி இக் கோயிலில் கொடியேற்றப்பட்டது. தினசரி குழந்தை பல்வேறு வாகனங்களில் சென்று, மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு தீர்த்தக்காவடி, அலங்கார காவடி, அலகு குத்தும் காவடி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.தேரோட்டம்: தேரோட்ட தினமான நேற்று குழந்தை வேலப்பர் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவ மூர்த்தி வள்ளி, தெய்வானையுடன் தேரில் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

பகல் 3 மணியளவில் சிதறுதேங்காய் உடைத்து, தேர்பவனி துவங்கியது. களிமண் திட்டு பகுதியில் பக்தர்கள் படி உருளுதல், அடி அளந்து சாமி கும்பிடுதல், அங்க பிரதட்சணம், போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தினர். சிதறு தேங்காய், வாழைப்பழம் சூறையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. பின் தண்ணீர் கரை பகுதியில் உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. நாளைய நிகழ்ச்சியில் குழந்தை வேலப்பரை குதிரை வாகனத்தில் பவனியாக கவை என்ற இடத்திற்கு கொண்டு சென்று ஆராதனை செய்து, பழநிக்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மூன்றாம் நாள் குழந்தை வேலப்பருக்கு ஆபரணங்கள் கழித்தல் நிகழ்ச்சியுடன், வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar