கடலூர் : கடலூர் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழாவை முன்னிட்டு நேற்று நாம சங்கீர்த்தனம் நடந்தது. கடலூர், கூத்தப்பாக்கத்தில் உள்ள ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் ஆராதனை விழா நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று காலை 9 மணிக்கு ஆராதனை மற்றும் பாலச்சந்தர் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ராகவேந்திரருக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பின்னர் புஷ்ப அலங்காரத்தில் ராகவேந்திரருக்கு மகா ஆராதனை நடந்தது. பின்னர் குன்னக்குடி இசைப்பள்ளி மாணவர்களின் நாம சங்கீர்த்தனம் இசை நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு ஸ்ரீமதி வசுதா ரவியின் சங்கீத நிகழ்ச்சி நடந்தது.