கோவில் அலுவலர்கள் அர்ச்சகர்களுக்கு மனிதநேய பயிற்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2016 01:02
மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, திருப்போரூரில் மனிதநேய பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்போரூர் கந்தசாமி கோவிலில், நேற்று முன்தினம் நடந்த இப்பயிற்சியை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவாஜி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். காஞ்சிபுரம்; செங்கல்பட்டு; மதுராந்தகம்; அச்சிறுபாக்கம்; திருக்கழுக்குன்றம்; மாமல்லபுரம்; திருப்போரூர்; திருவிடந்தை; வல்லக்கோட்டை; ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதி கோவில்களின் செயல் அலுவலர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள், கோவில் அறப்பணியில் சிரத்தையுடன் பணிபுரியவும், பக்தர்களை கனிவுடன் அணுகுவது குறித்தும், உளவியல் நிபுணர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.