திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.65 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2016 01:02
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், பக்தர்கள், 65.52 லட்சம் ரூபாய் ரொக்கம், அரை கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலில் 25 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை கோவில் ஊழியர்களால் பிரித்து எண்ணப்பட்டது. இதில், 65,52,964 ரூபாய் ரொக்கம், 561 கிராம் தங்கம் மற்றும், 4,182 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.