பதிவு செய்த நாள்
08
பிப்
2016
01:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோவிலில், தேர்த்திருவிழா நாளை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகரப்பகுதியில், காவல் தெய்வமாக உள்ள மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் நாளை துவங்குகிறது. வரும் 15ம் தேதி கரியகாளியம்மன் அணி எடுப்பு, 16ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும் 17ம் தேதி கரியகாளியம்மன் பண்டிகை, 19ம் தேதி கரியகாளியம்மன் கடைசிநாள் அபிேஷகம், 23ம் தேதி பூவோடு வைத்தல், 26ம் தேதி (இரவு) கிராம சாந்தி, 27ம் தேதி கொடி கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.வரும் 28ம் தேதி ஏ.பி.டி., பூவோடு, மார்ச் 1ம் தேதி இரவு அபிேஷகம், 2ம் தேதி காலையில் மாவிளக்கு பூஜையும், திருக்கல்யாண பூஜையும், தேர்த்திருவிழா முதல் நாள் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3ம் தேதி தேர் இரண்டாம் நாள், 4ம் தேதி தேரோட்டம் கடைசி நாள் நிகழ்ச்சியும் நடக்கிறது. 5ம் தேதி மஞ்சள் நீராடுதல், 7ம் தேதி மகா அபிேஷகமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.