வால்பாறை: வால்பாறை அண்ணாநகர் நாகம்மாள் கோவிலின், 5ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவில் விழாவில் கடந்த 5ம் தேதி ரவிச்சந்திரன் தலைமையில் பஜனைப்பாடல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 6ம் தேதி நடுமலை ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை, 8:30 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா கார்த்திக், தலைவர் கரன்ராஜ், உட்பட பலர் செய்திருந்தனர்.