செஞ்சி: செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபையின் வைணவ மாத மாநாடு நடந்தது. சபை தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். செயலாளர் ராமு திருமால் துதி பாடினார். சபை செயலர் ஆதிமூலம் வரவேற்றார். ‘திருமழிசைப் பிரான்’ தலைப்பில் வளையசெட்டிகுளம் ரகுபதி, ‘நாச்சியார் திருமொழி’ தலைப்பில் திண்டிவனம் வெங்கடேசன் சொற்பொழிவாற்றினர். உபயதாரர் பத்மாவதி மற்றும் பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டிகள் கலந்து கொண்டனர். அண்ணாமலை நன்றி கூறினார்.